வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்பு - தந்தி டிவி


வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்பு - தந்தி டிவி
x
தினத்தந்தி 19 May 2019 7:54 PM IST (Updated: 19 May 2019 7:54 PM IST)
t-max-icont-min-icon

வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்புள்ளது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.


தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு இடங்களில் தேர்தல் அன்று வாக்களித்த மக்களை சந்தித்து, அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கேட்டறிந்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. வடசென்னையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. 

வடசென்னை தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 41-47 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு 34-40 சதவீதம் பேரும், அமமுகவிற்கு என்று 6-9 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என  6-9 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 4-7 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Next Story