நாடு முழுவதும் 7 வது கட்ட வாக்குப்பதிவு முடிந்தது, 60.21 சதவீத வாக்குகள் பதிவு


நாடு முழுவதும் 7 வது கட்ட வாக்குப்பதிவு முடிந்தது,  60.21 சதவீத வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 19 May 2019 6:10 PM IST (Updated: 19 May 2019 6:10 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் 7 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது.


இந்திய நாடாளுமன்ற தேர்தல், ஒட்டு மொத்த உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இந்தநிலையில் 7-வது இறுதிக்கட்ட தேர்தல் 59 தொகுதிகளில் இன்று நடந்தது. பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டிகாரில் 1 என 59 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. 7 கட்டங்களாக பதிவான வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இன்றைய 7-ம் கட்ட வாக்குப்பதிவில் 60.21 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. பீகாரில் 49.92%, இமாச்சல பிரதேசத்தில்  66.18%, மத்திய பிரதேசத்தில் 69.38%, பஞ்சாப்பில் 58.81%, உத்தரபிரதேசத்தில் 54.37%, மேற்கு வங்காளத்தில் 73.05%, ஜார்க்கண்டில் 70.5%, சண்டிகாரில் 63.57% வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக மேற்கு வங்காளத்தில் 73.05 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 

சில வாக்குச்சாவடிகளில் 6 மணிக்கு முன்னதாக வரிசையில் நின்ற வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Next Story