தேர்தலை நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது - வாக்களித்த பின் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் பேட்டி
தேர்தலை இவ்வளவு நீண்ட நாட்களாக நடத்தக் கூடாது என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா,
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிய நிலையில், நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலுக்கான 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் 59 மக்களவைத் தொகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒன்று என 59 தொகுதிகளில் விறு விறுப்புடன் வாக்குப் பதிவு நடைப்பெற்று வருகிறது.
பாட்னாவில், முதல்-மந்திரி நிதிஷ்குமார், லக்னோவில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கோரம்பூரில் வாக்களித்தார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஹர்பஜன்சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
பீகார் மாநிலம் பாட்னா ராஜ்பவன் வாக்குச்சாவடியில் வாக்களித்த பின் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மக்களவை தேர்தலை இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது. ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் இடையே அதிக நாட்கள் இடைவெளி தேவையில்லை. இந்த கோடையில் வாக்காளர்கள் உட்பட அனைவருக்கும் இது, தொல்லை கொடுக்கக் கூடியது. தேர்தலை குறைந்த நாட்களில் நடத்தும் விவகாரம் பற்றி அனைத்துக்கட்சிகளுக்கும் கடிதம் எழுத உள்ளேன் என தெரிவித்தார்.
Related Tags :
Next Story