ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார், சந்திரபாபு நாயுடு - பா.ஜனதா அல்லாத கூட்டணி அரசு அமைக்க முயற்சி
தேர்தல் முடிவுக்கு பின்னர் பா.ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணி அரசு அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ள சந்திரபாபு நாயுடு நேற்று ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முடிவுக்கு பின்னர் எதிர்க்கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணி அரசை உருவாக்க தெலுங்குதேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டுள்ளார். அவர் ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர்களை சில முறை சந்தித்து பேசியுள்ளார்.
டெல்லியில் நேற்று முன்தினம் அவர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் சந்தித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து நேற்று அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரு கூட்டணி அரசை அமைப்பதற்கான வாய்ப்புகள் பற்றி அவருடன் ஆலோசனை நடத்தினார். ராகுல் காந்தி ஏற்கனவே, “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் அடுத்த அரசை அமைப்பதற்கான வியூகம் தயாராக உள்ளது” என்று கூறியிருந்தார்.
பின்னர் சந்திரபாபு நாயுடு இந்திய கம்யூனிஸ்டு தலைவர்கள் சுதாகர் ரெட்டி, டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லோக்தந்திரிக் ஜனதாதளம் கட்சி தலைவர் சரத்யாதவ் ஆகியோரையும் சந்தித்து இதுதொடர்பாக பேசினார்.
மாலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்ற சந்திரபாபு நாயுடு அங்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரை தனித்தனியாக அவர்கள் வீடுகளில் சந்தித்து பேசினார். வருகிற நாட்களில் அவர் மற்ற எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுவார் என தெரிகிறது.

Related Tags :
Next Story