எங்களுக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை: காங்கிரஸ்
பாரதீய ஜனதா இல்லாத ஆட்சியை கொண்டு வருவோம் என ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் கூறி உள்ளார்
புதுடெல்லி
தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்து ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழும்பியுள்ளது. இதற்கிடையில் நாங்களே ஆட்சி அமைப்போம் என பா.ஜ.க.வும், காங்கிரசும் உறுதியாக கூறி வருகின்றன.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கூறியதாவது:-
மோடி மீண்டும் பிரதமராக முடியாது. பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இல்லாத ஆட்சியே அமையும். எனது அனுபவத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலையை கருத்தில் வைத்து கூறுகிறேன். பா.ஜ.க 2-வது முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை.
பாஜக தங்களின் செல்வாக்கில் 125 தொகுதிகளுக்கு மேல் இழக்கும் வாய்ப்பு உள்ளது. வேலையின்மை, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்டி., உள்ளிட்ட பிரச்சினைகளால் நாடு பாதிக்கப்பட்டு விட்டது. ஏழைகளுக்கு இந்த அரசு எதுவும் செய்யவில்லை. பா.ஜ.,வின் கொள்கை மற்றும் வெறுப்பு அரசியல் தோல்வியில் முடியும்.
எங்களுக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்றாலும், பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க விடமாட்டோம் இவ்வாறு ஆசாத் கூறினார்.
Related Tags :
Next Story