மம்தாவின் கோபத்தால் பாஜகவுக்கு மேற்குவங்க மக்களின் ஆதரவு பெருகியுள்ளது - பிரதமர் மோடி


மம்தாவின் கோபத்தால் பாஜகவுக்கு மேற்குவங்க மக்களின் ஆதரவு பெருகியுள்ளது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 May 2019 8:04 PM IST (Updated: 15 May 2019 8:04 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் கோபத்தால் பாஜகவுக்கு மக்களின் ஆதரவு பெருகி உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

2019 நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 19-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக இறங்கியுள்ளார்.  

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் பிஷரத் நகரில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது:- 

கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா பேரணியில் மம்தா பானர்ஜி அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு பழி வாங்குவேன் என்று கூறிய மம்தா பானர்ஜி அதனை செயல்படுத்தி விட்டார்.  

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ஊடுருவல்கள் முற்றிலும் தடுக்கப்படும். மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு பெரும்பான்மையான இடங்கள் கிடைக்கும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன. 

சகோதரி மம்தாவின் கோபத்தால் பாஜகவுக்கு மேற்குவங்க மக்களின் ஆதரவு பெருகியுள்ளது.  மம்தாவின் பதற்றத்தை பார்க்கும் போது பாஜக 300 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறும் என்று கருதுகிறேன்.  மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையைக் மம்தா பானர்ஜி நெரித்து விட்டார் என்று குற்றம்சாட்டினார்.

Next Story