தேர்தல் நடக்கும்பொழுது ஏன் பயங்கரவாதிகளை கொன்றனர் என சிலர் கேள்வி எழுப்புவர்; பிரதமர் மோடி பேச்சு


தேர்தல் நடக்கும்பொழுது ஏன் பயங்கரவாதிகளை கொன்றனர் என சிலர் கேள்வி எழுப்புவர்; பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 12 May 2019 12:24 PM IST (Updated: 12 May 2019 12:24 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடக்கும்பொழுது ஏன் பயங்கரவாதிகளை கொன்றனர் என சிலர் கேள்வி எழுப்புவார்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

குஷிநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் நகரில் ஹிந்த் சீதாபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் பயங்கரவாதிகளுக்கும், படையினருக்கும் இடையே கடுமையாக துப்பாக்கி சண்டை நடந்தது.  இந்த நிலையில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் பெருமளவிலான வெடிப்பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன.

இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து உள்ளன. இன்று 6வது கட்ட தேர்தல், 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடக்கிறது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் குஷிநகர் பகுதியில் பிரதமர் மோடி இன்று பேசும்பொழுது, காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகள் நமது ராணுவ வீரர்களால் கொல்லப்பட்டு உள்ளனர்.  தேர்தல் நடக்கும்பொழுது மோடி ஏன் பயங்கரவாதிகளை கொன்றார் என சிலர் வருத்தமடைவர்.

ஆயுதமேந்திய ஒரு பயங்கரவாதி தாக்குதல் நடத்த வருகிறான்.  இதற்கு நமது வீரர்கள் தேர்தல் ஆணையத்திடம் சென்று அவனை கொல்வதற்கு அனுமதி கேட்டு விட்டு செல்ல வேண்டுமா? என்று கூறினார்.

Next Story