6-ம் கட்ட தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது- அகிலேஷ் யாதவ்
6-ம் கட்ட மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது; பாஜக சாதி அரசியல் செய்து வருகிறது என அகிலேஷ் யாதவ் கூறினார்.
லக்னோ,
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பாஜக சாதி அரசியல் செய்து வருகிறது என குற்றம் சாட்டி பேசியுள்ளார். மேலும் பேட்டியில் அவர் கூறியதாவது:-
பாஜகவினர் அவர்கள் கட்சிக்கு என்ன வேண்டுமோ, அதை செய்வதற்காக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். பாஜக, சாதி அரசியல் செய்து வருகிறது. இவர்களின் ஆட்சி வெவ்வேறு சாதி, மதத்தவர்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. பாஜக ஆட்சி பொய்களையும், வெறுப்புணர்வையும் முன்வைத்தே இயங்குகிறது.
மற்ற கட்சியினருக்கு ரெட் கார்ட் வழங்குவதன் மூலம் பாஜக வெற்றி பெற முயலுகிறது. சமாஜ்வாதி கட்சியினருக்கு ரெட் கார்ட் கொடுத்து, அவர்கள் போட்டியில் இருந்து விலக வேண்டும் என அதிகாரிகளுக்கு மறைமுகமாக உத்தரவிட்டுள்ளனர்.
பாஜக, தாங்கள் தான் குற்றமற்றவர்கள் என்றும் மற்றவர்கள் போலியானவர்கள் என்றும் கூறி மக்களை அச்சுறுத்தும் முயற்சியில் உள்ளது.
வரவிருக்கும் 6ம் கட்ட தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரு சீட்டில் கூட வெற்றி பெற முடியாது. 7ம் கட்ட தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் தான் வெற்றி பெறும் என்று கூறினார்.
Related Tags :
Next Story