இந்திய ராணுவம் மோடிக்கானது கிடையாது, இந்திய தேசத்திற்கானது - அம்ரீந்தர் சிங்
இந்திய ராணுவம் மோடிக்கானது கிடையாது, இந்திய தேசத்திற்கானது என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சுனாமில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங் பிரசாரம் மேற்கொண்டார். பிரதமர் மோடியும், அவருடைய பா.ஜனதா கட்சியும் இந்தியாவின் வலிமையையும், ஒற்றுமையையும் அழிக்க அனுமதிக்காதீர்கள் என மக்களை நோக்கி கேட்டுக்கொண்டார்.
பா.ஜனதா பிரசாரத்திற்கு ராணுவத்தை பயன்படுத்துவதை விமர்சனம் செய்த அம்ரீந்தர் சிங், “பாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் மோடி என்னுடைய ராணுவம் என அழைக்க தொடங்கி விட்டார். ஆனால் ராணுவம் மோடிக்கு சொந்தமானது கிடையாது. இந்திய நாட்டுக்கு சொந்தமானது. இந்திய ராணுவத்தில் 10 ஆண்டுகள் சேவை செய்தேன். நான் இந்திய தேசத்திற்காக பணியாற்றினேன், மோடிக்காக பணியாற்றவில்லை” என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story