எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு - சந்திரசேகர ராவ் குறித்து பிரதமர் கருத்து


எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு - சந்திரசேகர ராவ் குறித்து பிரதமர் கருத்து
x
தினத்தந்தி 10 May 2019 3:55 PM IST (Updated: 10 May 2019 3:55 PM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு மற்றும் சந்திரசேகர ராவ் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்து உள்ளார். #PMModi

புதுடெல்லி,

ஒவ்வொரு வாக்குப்பதிவு முடிவுகளின் போதும் கணிப்புகள் மாறிய வண்ணமுள்ளது. இது அரசியல் களத்தின் செயல்பாடுகளை வேகப்படுத்தி வருகிறது! மே 23-ல் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே ஒரு மாற்று அணியை  உருவாக்க வேண்டும் என ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு ,தெலுங்கானா  முதல்வர்  சந்திரசேகர ராவ் ஆகியோர் முயற்சி எடுத்து வருகின்றனர்.

சந்திரசேகர ராவ், “தேசிய அரசியலில் ஒரு மாற்றம் தேவை” என்ற முழக்கத்துடன் மம்தா, மாயாவதி, நவீன் பட்நாயக், தேவகவுடா ஆகிய தலைவர்களை சந்தித்தார். தொடர்ச்சியாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினையும் சந்திக்க முயற்சி மேற்கொண்டார்.  சந்திரசேகர ராவை  தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருப்பதாக கூறி ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டுவிட்டார். 

இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு வரும் 21-ந்தேதி ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த் நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்-  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திப்பது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி கூறியதாவது:-

முதல் மூன்று கட்ட தேர்தலில்  அவர்கள் எனக்கு எதிராக அவதூறு பரப்பினர்.  காற்று எந்த பக்கம் வீசுகிறது  என்பதை அவர்கள் உணர்ந்தபோது, வாக்கு இயந்திரங்களை  (EVM)  குற்றம்சாட்ட  பயன்படுத்தினர். கிரிக்கெட் விளையாட்டில் அவுட் ஆகும்  வீரர் சில சமயங்களில் நடுவரை அவதூறாக பேசுவார் அது போல் அவர்கள் தேர்தல் ஆணையத்தை அவதூறாக பேசுகின்றனர் என கூறினார்.

Next Story