சாம் பிட்ரோடா கருத்து: காங்கிரஸ் மனநிலையை பிரதிபலிக்கிறது - பிரதமர் மோடி
சாம் பிட்ரோடா கருத்து குறித்து பிரதமர் மோடி கூறும் போது இது காங்கிரஸ் மனநிலையை பிரதிபலிக்கிறது என கூறினார். #SamPitroda #1984Riots #PMModi
புதுடெல்லி,
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 3,325 சீக்கியர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு சொந்தமான பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள உடைமைகளை சூறையாடி, சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த 241 வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.
தற்போது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது இந்த பிரச்சினையை மையப்படுத்தி பாஜகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா ’அது 1984-ம் ஆண்டில் நடந்து முடிந்து போன கதை. நீங்கள் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் என்ன சாதித்திருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
‘ஆனது ஆகிப்போனது, முடிந்து போன கதை’ என சீக்கிய மக்களின் உயிரிழப்பை துச்சப்படுத்தும் வகையில் சாம் பிட்ரோடா தெரிவித்த இந்த கருத்துக்கு பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் சில சீக்கிய அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை மையப்படுத்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வீட்டின் அருகே பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1984 கலவரம் தொடர்பாக சாம் பிட்ரோடாவின் கருத்து குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-
இது காங்கிரஸ் மனநிலையை பிரதிபலிக்கிறது, அவை பல ஆண்டுகளாக இதை செய்து வந்துள்ளது. இது குறித்து ராஜீவ் காந்தி ஒரு பெரிய மரம் விழும் போது பூமி குலுங்கும் என கூறினார். அப்போது கமல்நாத் பஞ்சாப் மாநில பொறுப்பில் இருந்தார். தற்போது அவர் மத்திய பிரதேச முதல்வராக உள்ளார். எனவே இதை ஒரு தனிநபரின் அறிக்கையாக எடுத்துக்கொள்ள முடியாது என கூறினார்.
PM Modi on Sam Pitroda's remark on 1984 riots: Reflects Congress's mentality, they have done this for years. Rajiv Gandhi had said 'when a big tree falls earth shakes'. They even made Kamal Nath incharge of Punjab,now made him MP CM. So dont take this as an individual's statement pic.twitter.com/CR3kLHDJs1
— ANI (@ANI) May 10, 2019
Related Tags :
Next Story