பா.ஜனதா வேட்பாளர் பாரதி கோஷ் காரிலிருந்து பணம் பறிமுதல்
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா வேட்பாளர் பாரதி கோஷ் காரிலிருந்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
பா.ஜனதா சார்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பாரதி கோஷ் காதால் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருடைய தொகுதியில் வரும் 12-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் மேற்கு மிட்னாப்பூரில் பிங்லாவில் அவருடைய காரை போலீசார் மறித்து சோதனையை மேற்கொண்டனர். அப்போது அவருடைய காரில் இருந்து 1.13 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
எங்களுக்கு கிடைத்த தகவலின்படி காரில் பணம் வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் சோதனையை மேற்கொண்டோம். 1.13 லட்சம் தான் சிக்கியது என போலீஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே என்னிடம் மாவட்ட போலீசார் மூன்று மணி நேரம் விசாரணையை மேற்கொண்டனர் என பாரதி கோஷ் குற்றம் சாட்டியுள்ளார். பாரதி கோஷ் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்கிறார் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் கோஷ் தரப்பில் என்னுடைய சொந்த செலவுக்காக எடுத்துச் சென்ற பணமாகும் என கூறியுள்ளார்.
பாரதி கோஷ் சமீபத்தில் பிரசாரத்தில் பேசிய வார்த்தைகள் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசாரை தாக்க உ.பி.யில் இருந்து பா.ஜனதாவினர் வருவார்கள் என பேசியிருந்தார்.
Related Tags :
Next Story