காவலாளியே திருடன் என கூறிய விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்
காவலாளியே திருடன் என சுப்ரீம் கோர்ட்டு கூறி விட்டது என தவறாக கருத்து தெரிவித்த விவகாரத்தில், ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
புதுடெல்லி,
ரபேல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய ஆவணங்களின் அடிப்படையில் மறு ஆய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 10-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
இது தொடர்பாக, அதே நாளில் அமேதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார். அப்போது அவர், “காவலாளியே திருடன் என்பதை சுப்ரீம் கோர்ட்டு கூறி விட்டது” என தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீது சுப்ரீம் கோர்ட்டில் பாரதீய ஜனதா கட்சி எம்.பி. மீனாட்சி லேகி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு கடந்த 15-ந் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, “காவலாளி நரேந்திர மோடியே திருடனாகி விட்டார் என்று ராகுல் காந்தி கூறியபடி நாங்கள் எந்த தருணத்திலும் குறிப்பிடவில்லை என்பதால், இந்த வழக்கு கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கைக்கு தகுதியான வழக்குதான்” என குறிப்பிட்டனர்.
அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.
அதைத் தொடர்ந்து அவர் 22-ந் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக அடைப்புக்குறிக்குள் தெரிவித்திருந்தார். அது மறுநாளில் (23-ந் தேதி) விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் அதை நிராகரித்தனர்.
அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி தரப்பில் 2-வதாக ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 22 பக்கங்களைக் கொண்ட அந்த பிரமாண பத்திரத்திலும் தனது முதல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருந்ததையே ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
அது 30-ந் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ராகுல் காந்தி தனது தவறை ஒப்புக்கொள்ளாததை சாடினர்.
“நீங்கள் தவறு செய்கிறபோது, அந்த தவறை ஒப்புக்கொள்ள வேண்டும். நீங்கள் பிரமாண பத்திரத்தில் என்ன கூற வருகிறீர்கள் என்பதையே புரிந்துகொள்ள முடியவில்லையே” என கடிந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வகையில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி கேட்டுக்கொண்டார். அதை கோர்ட்டும் ஏற்றது.
இந்த நிலையில் ராகுல் காந்தி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் 3 பக்க அளவிலான புதிய பிரமாண பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இந்த கோர்ட்டின் மீது நான் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன்.
நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நீதி நிர்வாகத்தின் செயல்முறையில் தலையிடும் எந்தவொரு செயலையும் ஒருபோதும் செய்தது கிடையாது. தவறான கருத்தினை தெரிவித்ததற்காக இந்த கோர்ட்டிடம் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்.
நான் கூறிய வார்த்தைகள் முற்றிலும் உள்நோக்கம் இல்லாதவை, விருப்பம் இல்லாதவை, கவனக்குறைவாக கூறியவைதான்.
இந்த பிரமாண பத்திரத்தை தயவுகூர்ந்து ஏற்று, இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நடவடிக்கையை முடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையும், ரபேல் வழக்கு தீர்ப்பின் மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையும் இன்று (வியாழக்கிழமை) ஒன்றாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
அப்போது ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை ஏற்று, அவர் மீதான கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட்டு கைவிடுமா என்பது தெரிய வரும்.

Related Tags :
Next Story