அவுரங்கசீப்பின் நவீன அவதாரம் மோடி - காங்கிரஸ் காட்டம்


அவுரங்கசீப்பின் நவீன அவதாரம் மோடி - காங்கிரஸ் காட்டம்
x
தினத்தந்தி 9 May 2019 3:00 AM IST (Updated: 9 May 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

அவுரங்கசீப்பின் நவீன அவதாரம் மோடி என காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

வாரணாசி,

அரியானா மாநிலம் குருசேத்திரத்தில் பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்தபோது, தன்னை எப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர் என வேதனையுடன் பட்டியலிட்டார்.

இதற்கு மத்தியில் பிரதமர் மோடியை அவரது வாரணாசி தொகுதியிலேயே நேற்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம், அவரை அவுரங்கசீப்பின் நவீன அவதாரம் என குறிப்பிட்டார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்த தொகுதி மக்கள் அவுரங்கசீப்பின் நவீன அவதாரத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். வாரணாசியில் பெரும் சாலைகள் அமைப்பதற்காக மோடியின் அறிவுறுத்தலால் நூற்றுக்கணக்கான கோவில்கள் இடித்து தள்ளப்பட்டுள்ளன” என கூறினார்.

“விஸ்வநாதரை தரிசிக்க கோவிலுக்கு வருகிறவர்களிடம் மோடி அறிவுறுத்தலின்பேரில் ரூ.550 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அவுரங்கசீப்பால் செய்ய முடியாததை மோடி செய்கிறார் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது” எனவும் அவர் கிண்டல் செய்தார்.

Next Story