டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் ராகுலை பிரதமராக ஏற்க தயார் -கெஜ்ரிவால்
டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் ராகுலை பிரதமராக ஏற்க தயார் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது கெஜ்ரிவாலின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இப்போதைய தேர்தலில் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையிலும் இவ்விவகாரம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதாக இருந்தால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கவும் தயார் என கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். எனக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. யார் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்க தயாராகவே உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பிரதமரானால் ஆதரிக்க தயார் என கெஜ்ரிவால் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story