ராஜீவ் காந்தி குறித்து பேசியது தொடர்பாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
ராஜீவ் காந்தி குறித்து பேசியது தொடர்பாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ராஜீவ் காந்தி ‘மிஸ்டர் கிளீன்’ என காங்கிரஸ் கட்சியினரால் போற்றப்பட்டார். ஆனால் கடைசி காலத்தில் அவருடைய வாழ்க்கை ‘நம்பர்–1’ ஊழல்வாதியாக தான் முடிவடைந்தது என்றார். ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சனம் செய்யும் நிலையில், கடந்த 1980–களில் பரபரப்பாக பேசப்பட்ட போபர்ஸ் ஊழலில் ராஜீவ் காந்தியை தொடர்புபடுத்தி பிரதமர் மோடி இவ்வாறு பேசினார். மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையர்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் சிங்வி, ராஜீவ் சுக்லா, சல்மான் குர்ஷித் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, இந்திய கலாசாரத்துக்கு எதிராகவும், சட்டவிரோதமாகவும் பேசி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story