பா.ஜனதா 282 தொகுதிகளை தாண்டி வெற்றிப்பெறும் -அமித்ஷா பேட்டி


பா.ஜனதா 282 தொகுதிகளை தாண்டி வெற்றிப்பெறும் -அமித்ஷா பேட்டி
x
தினத்தந்தி 7 May 2019 4:08 PM IST (Updated: 7 May 2019 4:08 PM IST)
t-max-icont-min-icon

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா 282 தொகுதிகளை தாண்டி வெற்றிப்பெறும் என அமித்ஷா கூறியுள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 23-ம் தேதி நடக்கிறது. பா.ஜனதாவே மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியது. ஆனால் 2014-ம் ஆண்டு தேர்தலை போன்று தனிப்பெரும்பான்மையுடன் வராது, கூட்டணி ஆட்சிக்குதான் வழி உள்ளது என பெரும்பாலான கருத்துக்கணிப்புக்கள் வெளியானது. 2014 தேர்தலில் பா.ஜனதா 282 தொகுதிகளில் வென்றது.

பா.ஜனதாவிற்கு தீவிர பிரசாரம் செய்துவரும் அமித்ஷா பேசுகையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா 282 தொகுதிகளை தாண்டி வெற்றிப்பெறும் என கூறியுள்ளார். 

ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், பா.ஜனதா 282-க்கும் அதிகமான தொகுதிகளில் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிப்பெறும் தொகுதிகளின்  எண்ணிக்கையும் உயரும். வாக்குப்பதிவு தொடர்பான எங்களுடைய பகுப்பாய்வு  அதிகமான தொகுதிகளில் வெற்றி என்பதை தவிர்த்து அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்யும் எனக் கூறியுள்ளார்.

Next Story