சந்திரசேகர ராவ் தரப்பில் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்கவில்லை -ராஷ்ட்டிர சமிதி எம்.பி. பேட்டி
திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தரப்பில் அணுகவில்லை என்று தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி எம்.பி கவிதா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணி அமைக்கும் முடிவோடு தற்போது தென்னிந்திய அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனை நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தார். அதேபோல் கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் நேற்று போனில் பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலினை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார். மே 13-ம் தேதி இதற்காக தேதி குறிக்கப்பட்டது. சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடக்க இருந்தது. இதில் திமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என கூறப்பட்டது. 3-ம் அணி தொடர்பாக ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்திக்க இருந்ததாக தகவல் வெளியானது. இந்த தகவல் காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு இல்லை என தகவல் வெளியானது.
இதுகுறித்து தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி எம்.பி கவிதாவிடம் கேட்டபோது, திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டு தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தரப்பில் அணுகவில்லை என கூறி உள்ளார்.
TRS MP K Kavitha: There is no appointment fixed between Telangana CM K Chandrasekhar Rao and DMK President MK Stalin yet. (file pic) pic.twitter.com/sMw3H042qT
— ANI (@ANI) May 7, 2019
Related Tags :
Next Story