என்னுடைய மாதாவிற்கு வாக்களிப்பது பாரத மாதாவிற்கு வாக்களிப்பது - வருண் காந்தி பிரசாரம்
என்னுடைய மாதாவிற்கு வாக்களிப்பது பாரத மாதாவிற்கு வாக்களிப்பது என பா.ஜனதா எம்.பி. வருண் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். அவருடைய மகன் வருண் காந்தி பிலிப்பைட் தொகுதியில் போட்டியிடுகிறார். வருண் காந்தி பிரசாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். சுல்தான்பூரில் பிரசாரம் மேற்கொண்ட போது, “என்னுடைய தாயார் இங்கு போட்டியிடுகிறார்கள். அவர் மிகவும் உன்னதமான ஆத்மா ஆவார். என்னுடைய மாதாவிற்கு வாக்களிப்பது பாரத மாதாவிற்கு வாக்களிப்பது போன்றது. நீங்கள் இந்துஸ்தானத்தில் வாழ்கிறீர்கள், நீங்கள் இந்துஸ்தானத்திற்காக வாக்களிக்க வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு (பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணி) வாக்காளித்தால் அது பாகிஸ்தானுக்கு வாக்களிப்பது போன்றது,” என்று பேசியுள்ளார்.
முன்னதாக வருண் காந்தி மிகவும் மோசமான கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். என்னுடைய காலணியின் கயிறை கட்டியவர் இப்போது என்னுடைய தயாருக்கு எதிரான போட்டியிடுகிறார்கள் என பேசியிருந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் தரப்பில் போட்டியிடும் சோனு சிங் மற்றும் அவருடைய சகோதரர் யாஷ் பாத்ரா சிங்கை குறிப்பிட்டு இப்படி பேசியிருந்தார். சோனு சிங், பா.ஜனதாவில் வருண் காந்தியின் ஆதரவாக இருந்தார். இப்போது கூட்டணி கட்சியின் சார்பில் வேட்பாளராகியுள்ளார். இதேபோன்று சமாஜ்வாடியையும், யாதவ குலத்தையும் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
Related Tags :
Next Story