புயல் பாதிப்பிலும் அரசியல் செய்கிறார் மம்தா பானர்ஜி -பிரதமர் மோடி தாக்கு


புயல் பாதிப்பிலும் அரசியல் செய்கிறார் மம்தா பானர்ஜி -பிரதமர் மோடி தாக்கு
x
தினத்தந்தி 6 May 2019 2:00 PM IST (Updated: 6 May 2019 3:21 PM IST)
t-max-icont-min-icon

புயல் பாதிப்பிலும் மேற்குவங்காள முதலவர் மம்தா பானர்ஜி அரசியல் செய்கிறார் என பிரதமர் மோடி கூறினார். #CycloneFani #PMModi #MamataBanerjee

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் தம்லுக் பகுதியில் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசியதாவது:-

சகோதரி மம்தா மிகவும் விரக்தியடைந்துள்ளார். கடவுள் பற்றி பேச அல்லது கேட்க கூட விரும்பவில்லை. 'ஜெய் ஸ்ரீ ராம்' முழக்கமிடும் மக்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார் சகோதரி மம்தா. பானி புயலை வைத்து கூட மம்தா பானர்ஜி அரசியல் செய்ய முயற்சி செய்கிறார். நான் சகோதரி மம்தாவை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவர் அகங்காரத்துடன்  என்னிடம் பேச மறுப்பு தெரிவித்தார் என பிரதமர் மோடி கூறினார்.

Next Story