வேட்பு மனு தள்ளுபடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்பு படை வீரர் முறையீடு
வேட்பு மனு தள்ளுபடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் முறையிட்டுள்ளார்.
புதுடெல்லி,
பாதுகாப்புப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்பு படை வீரர் கடந்த 2017-ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து முன்னாள் பாதுகாப்பு படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக தெரிவித்திருந்தார். இந்த சூழலில், வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து, சமாஜ்வாடி கட்சி சார்பில் தேஜ் பகதூர் யாதவ் நிறுத்தப்பட்டார்.
வாரணாசி தொகுதியில் கடந்த மாதம் தேஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் தனது பணி நீக்கம் தொடர்பான சில ஆவணங்களை சமர்பிக்க தவறியதால், அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் முறையிடப்போவதாக அறிவித்து இருந்த தேஜ் பகதூர் யாதவ், இன்று உச்சநீதிமன்றத்தில் அதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளார்.
Related Tags :
Next Story