மக்களவை தேர்தல் 5-ம் கட்ட வாக்குப்பதிவு காலை 9 மணி நிலவரம்
மக்களவை தேர்தல் 5-ம் கட்ட வாக்குப்பதிவு : காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 2.44 % வாக்குகள் பதிவாகி உள்ளது. #LokSabhaElections2019
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்து விட்டன. இந்நிலையில், 51 தொகுதிகளில் 5-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகள், 7 மாநிலங்களில் அமைந்துள்ளன.
அதிகபட்சமாக, உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 12 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 7 தொகுதிகள், மத்தியபிரதேசத்தில் 7 தொகுதிகள், பீகார் மாநிலத்தில் 5 தொகுதிகள், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகள், காஷ்மீர் மாநிலத்தில் 2 தொகுதிகள் என மொத்தம் 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
மக்களவை தேர்தல் 5-ம் கட்ட வாக்குப்பதிவு : காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 2.44% வாக்குகள் பதிவாகி உள்ளது
உத்தரபிரதேசத்தில் 9.82 சதவீத ஓட்டுப்பதிவும், ஜார்கண்டில் 13.46 சதவீத ஓட்டுப்பதிவும், பீகார் 11.51 சதவீத ஓட்டுப்பதிவும் நடைபெற்று உள்ளது.
மேற்குவங்காள மாநிலத்தில் 14.49 சதவீத ஓட்டுப்பதிவும், ஜம்முகாஷ்மீரில் 0.80 சத்வீத ஓட்டூபதிவும், மத்திய பிரதேசத்தில் 11.82 சதவீதம் ஓட்டும் பதிவாகி இருந்தது.
Related Tags :
Next Story