காஷ்மீர் வாக்குசாவடியில் கையெறி குண்டு வீசி தாக்குதல், மே.வங்கத்தில் வன்முறை


காஷ்மீர் வாக்குசாவடியில் கையெறி குண்டு வீசி தாக்குதல், மே.வங்கத்தில் வன்முறை
x
தினத்தந்தி 6 May 2019 9:48 AM IST (Updated: 6 May 2019 9:48 AM IST)
t-max-icont-min-icon

புல்வாமா மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. எனினும், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. #LokSabhaElections2019

ஸ்ரீநகர், 

மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. 7 மாநிலங்களில் உள்ள 51  தொகுதிகளில் இன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மூ காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நடக்கும் இடங்களுக்கு அருகில் வன்முறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஜம்மூ காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில்,  கையெறிக் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. எனினும் இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெறும் பாரக்போர் தொகுதி பாஜக வேட்பாளர் அர்ஜூன் சிங், தன்னை திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.  வாக்காளர்களை வாக்களிக்க விடாமல், திரிணாமூல் காங்கிரஸ் குண்டர்கள் தடுப்பதாகவும், குற்றம் சாட்டினார். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.


Next Story