மோடியால் மீண்டும் பிரதமர் ஆக முடியாது - மம்தா பானர்ஜி


மோடியால் மீண்டும் பிரதமர் ஆக முடியாது - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 2 May 2019 9:35 PM IST (Updated: 2 May 2019 9:35 PM IST)
t-max-icont-min-icon

நரேந்திர மோடியால் மீண்டும் பிரதமர் ஆக முடியாது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகப்போவது கிடையாது. அவர் திரும்பி வரமுடியாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அவர் வருவதற்கான கணக்கை நீங்கள் கூறுங்கள் என்று பேசியுள்ளார். மத்தியில் மாநில கட்சிகளின் கூட்டணியுடன் புதிய அரசு அமையும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் மம்தா பானர்ஜி. 

பிரதமர் மோடிக்கு குர்தா மற்றும் இனிப்பு அனுப்பியது தொடர்பான கேள்விக்கு மம்தா பானர்ஜி பதில் அளித்து பேசுகையில், அது கொல்கத்தாவின் கலாச்சாரமாகும், அரசியலமைப்பு பொறுப்பில் உள்ளவர்களுக்கு குர்தாவை அனுப்பியுள்ளேன் என்று கூறியுள்ளார். 

Next Story