பயங்கரவாதத்தை எதிர்க்க வலுவான அரசு தேவை - பிரதமர் மோடி பிரச்சாரம்
பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நீடிப்பதால் அதனை எதிர்க்க நாட்டுக்கு வலுவான அரசு தேவை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பரைக் நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்த பிராந்தியமானது புத்த மதம் மற்றும் ராமாயண காலத்துடன் நீண்ட தொடர்புடையது. இதுபோன்ற இடங்களில்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். எனவே பயங்கரவாதத்தை ஒடுக்கும் திறன் பெற்ற வலிமையான அரசு வேண்டுமா? அல்லது பயங்கரவாதிகளுக்கு இடமளிக்கும் அரசு வேண்டுமா? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
எங்கள் ஆட்சி காலத்தில் நாட்டின் பாதுகாப்பில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவில்லை.
நாட்டில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு துல்லிய தாக்குதல் மற்றும் வான் தாக்குதல் மூலம் நாங்கள் பதிலடி கொடுத்தோம். மோடியை பார்த்து அஞ்சிய பயங்கரவாத குழுக்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளனர். இருப்பினும் வெளிநாட்டில் உள்ள அவர்களின் அச்சுறுத்தல் நீடிக்கத்தான் செய்கிறது. மத்தியில் பலவீனமான அரசு அமைந்தால் மீண்டும் அவர்கள் தங்கள் தாக்குதலை தொடங்கி விடுவார்கள். எனவே நீங்கள் இணைந்து ஒரு வலிமையான அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story