வாரணாசியில் ஏன் போட்டியிடவில்லை? -பிரியங்கா காந்தி பதில்


வாரணாசியில் ஏன் போட்டியிடவில்லை? -பிரியங்கா காந்தி பதில்
x
தினத்தந்தி 30 April 2019 5:40 PM IST (Updated: 30 April 2019 5:40 PM IST)
t-max-icont-min-icon

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடாதது தொடர்பாக பிரியங்கா காந்தி பதில் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அஜய் ராய் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதனால்  பிரியங்கா போட்டியிடுவார் என பணியாற்றிய அத்தொகுதி காங்கிரஸ் தொண்டர்கள் வருத்தம் அடைந்தனர். 

இப்போது வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடாதது தொடர்பாக பிரியங்கா காந்தி பதில் கூறியுள்ளார்.

நான் தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தினால் உ.பி.யில் போட்டியிடும் பிற வேட்பாளர்கள் அதிருப்தி அடைவார்கள் என கூறியுள்ளார்.
 
 “உ.பி.யில் காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களிடம் கருத்துக்களை கேட்டேன். இங்குள்ள 41 தொகுதிகளுக்கும் நான் பொறுப்பாக வேண்டும் என்று உறுதியாக கூறினேன். எனவே நான் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டால் அவர்கள் (41 வேட்பாளர்கள்) அதிருப்தி அடைவார்கள் என நினைத்தேன்,” என பிரியங்கா விளக்கம் கூறியுள்ளார். பிரியங்கா உ.பி. கிழக்கு பிராந்திய பொதுச்செயலாளராக பதவி வகித்துள்ளார். அப்பகுதியில் காங்கிரசுக்காக பணியாற்றி வருகிறார்.

Next Story