ஓட்டுப்பதிவில் பாஜகவிற்கு பிரச்சாரம் செய்த நாய் உரிமையாளர் மீது வழக்கு


ஓட்டுப்பதிவில் பாஜகவிற்கு பிரச்சாரம் செய்த நாய் உரிமையாளர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 April 2019 1:39 PM IST (Updated: 30 April 2019 1:39 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டுப்பதிவின் போது பாஜகவிற்கு பிரசாரம் செய்த நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #LokSabhaElections2019 #BJP

மும்பை

லோக்சபா தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப் பதிவு நாடு முழுவதும்  மகாராஷ்டிரா உள்பட 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு  நேற்று நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் உள்ள சில தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்தபோது, ‘பாஜகவுக்கு வாக்களித்து நாட்டை காப்பாற்றுங்கள்’ என்ற வாசகத்துடன் கூடிய பதாகை ஒன்றுடன் சென்ற நாயை தேர்தல் அதிகாரிகள் பிடித்தனர்.

தேர்தல் பிரச்சாரம் காலக்கெடு முடிந்த பின்னர் அந்த நாய் பிரச்சாரம் செய்ததாகவும், இதனால் அந்த நாயை பிடித்ததாகவும் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதனையடுத்து அந்த நாயின் உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

தேர்தல் பிரச்சாரங்களில் விலங்குகளை பயன்படுத்தக் கூடாது என்று விதியிருந்தும் விதியை மீறி பிரச்சாரம் செய்ததாக நாயின் உரிமையாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வினோத வழக்கால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story