ஓட்டளித்தவர்களின் விரலை நுகர்ந்து பார்த்து தங்களுக்குதான் ஓட்டளித்தார்களா என கண்டறிந்த கட்சியினர்


ஓட்டளித்தவர்களின் விரலை நுகர்ந்து பார்த்து தங்களுக்குதான் ஓட்டளித்தார்களா என கண்டறிந்த கட்சியினர்
x
தினத்தந்தி 30 April 2019 1:17 PM IST (Updated: 30 April 2019 1:57 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டளித்தவர்களின் விரலை நுகர்ந்து பார்த்து தங்கள் கட்சிக்கு ஓட்டளித்தார்களா என கண்டறித்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள். #LokSabhaElections2019

கொல்கத்தா

லோக்சபா தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு  நேற்று நடைபெற்றது. அதுபோல் மேற்கு வங்கத்தில் உள்ள சில தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்காளர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கின்றனரா என்பதை தெரிந்து கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி புதிய யுத்தியை கையாண்டுள்ளது குறித்து அம்மாநில பத்திரிகை அனந்தபசார் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

வாக்கு இயந்திரத்திலுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் வாசனை திரவியத்தை கட்சியினர் தெளித்து வைத்திருந்தனர். வாக்களித்து விட்டு வெளியே வரும் வாக்காளர்களின் விரலை நுகர்ந்து விரலில் வாசனை வருகிறதா என சோதனை செய்தனர்.

இதன் மூலம் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்ததை உறுதி செய்தனர் என செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் ஷிஷிர் பஜோரா கூறுகையில் மக்களால் புறக்கணிக்கப்படுவோம் என முன்கூட்டியே அறிந்த திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சியினர் இதுபோல் எந்த எல்லைக்கும் செல்வர் என்றார்.

Next Story