40 எம்.எல்.ஏ.க்கள் பற்றிய பேச்சு; பிரதமர் மோடி மீது புகார் அளிக்க திரிணாமுல் காங்கிரஸ் முடிவு


40 எம்.எல்.ஏ.க்கள் பற்றிய பேச்சு; பிரதமர் மோடி மீது புகார் அளிக்க திரிணாமுல் காங்கிரஸ் முடிவு
x
தினத்தந்தி 29 April 2019 5:17 PM IST (Updated: 29 April 2019 5:17 PM IST)
t-max-icont-min-icon

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர் என பேசிய பிரதமர் மோடி மீது புகார் அளிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்காள மாநிலம் செராம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர், மே 23ந்தேதி தேர்தல் முடிவு வரும்போது தாமரை எல்லா இடங்களிலும் மலரும். உங்கள் எம்.எல்.ஏ.க்கள் உங்களை விட்டு விலகி விடுவர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் இன்றுவரை எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என கூறினார்.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேலவை எம்.பி.யான தெரீக் ஓ பிரையன் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, காலாவதியான பிரதமர் அவர்களே.  உங்களுடன் ஒருவரும் சேரப்போவதில்லை.  ஒரு கவுன்சிலர் கூட உங்களுடன் வரப்போவதில்லை.  நீங்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறீர்களா அல்லது குதிரை பேரம் நடத்துகிறீர்களா என கூறினார்.

உங்களது காலாவதியாகும் நாள் நெருங்கி விட்டது.  குதிரை பேரம் நடத்தும் உங்கள் மீது தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் இன்று புகார் அளிக்க உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story