மத்திய பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு மம்தா பானர்ஜி கண்டனம்


மத்திய பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு மம்தா பானர்ஜி கண்டனம்
x
தினத்தந்தி 29 April 2019 5:15 PM IST (Updated: 29 April 2019 5:15 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் தொகுதிக்கு உட்பட்ட துப்ராஜ்பூரின் போடுமாவில் தேர்தல் நடைபெற்றபோது கிராம மக்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி கற்களைக் கொண்டு தாக்கினர். அப்போது மத்திய பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்ட துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டதாக தெரிகிறது. புல்லட் சுவரில் பாய்ந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, துப்ராஜ்பூரில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. சட்டம்-ஒழுங்கு மாநிலம் சம்பந்தப்பட்டது. அவர்கள் இதனை செய்ய முடியாது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.

Next Story