விதிகள் தெரியவில்லை எனில் ஏன் விளையாட வேண்டும்? காம்பீருக்கு ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி கேள்வி


விதிகள் தெரியவில்லை எனில் ஏன் விளையாட வேண்டும்? காம்பீருக்கு ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி கேள்வி
x
தினத்தந்தி 27 April 2019 7:29 PM IST (Updated: 27 April 2019 7:29 PM IST)
t-max-icont-min-icon

விதிகள் தெரியவில்லை எனில் ஏன் விளையாட வேண்டும்? என காம்பீருக்கு ஆம் ஆத்மியின் டெல்லி கிழக்கு தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார். #AamAadmiParty

புதுடெல்லி,

டெல்லியில் மக்களவைக்கான 6வது கட்ட தேர்தல் வருகிற மே 12ந்தேதி நடைபெற உள்ளது.  முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பா.ஜ.க. சார்பில் டெல்லி கிழக்கு தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார்.  கடந்த வியாழ கிழமை முன் அனுமதியின்றி ஜாங்புரா பகுதியில் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு காம்பீர் பேசியுள்ளார்.  தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி போலீசாருக்கு தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து காம்பீர் மீது முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டது.  இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி கிழக்கு தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் அதிஷி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முதலில் வேட்பு மனுவில் பல முரண்பாடுகள்.  பின்னர் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.  பின்பு சட்டவிரோத பேரணி நடத்தியதற்காக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

காம்பீருக்கு என்னுடைய கேள்வி: விதிகள் தெரியவில்லை எனில் ஏன் விளையாட வேண்டும்? என தெரிவித்துள்ளார்.

காம்பீரின் வேட்பு மனுவில் பல குறைபாடுகள் உள்ளன என தேர்தல் ஆணையத்திடம் அதிஷி புகார் கூறினார்.  பின் அவரது மனு ஏற்கப்பட்டது.  ஒன்றிற்கும் மேற்பட்ட தொகுதியில் வாக்காளராக பதிவு செய்து உள்ளார் என காம்பீர் மீது அதிஷி மற்றொரு புகார் கூறினார்.

Next Story