கவுதம் கம்பீரிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள்: கோர்ட்டில் ஆம் ஆத்மி வழக்கு


கவுதம் கம்பீரிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள்: கோர்ட்டில் ஆம் ஆத்மி வழக்கு
x
தினத்தந்தி 26 April 2019 6:59 PM IST (Updated: 26 April 2019 6:59 PM IST)
t-max-icont-min-icon

கவுதம் கம்பீரிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளது என கோர்ட்டில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்துள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பா.ஜனதா கட்சியில் இணைந்து கிழக்கு டெல்லி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு எதிராக அத்தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷி சார்பில் டெல்லி திஸ் ஹசாரி கோர்ட்டில் கிரிமினல் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிஷி வெளியிட்டுள்ள செய்தியில், கவுதம் கம்பீர் டெல்லியில் இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார். டெல்லியில் ராஜேந்திர நகர், கரோல் பாக் என 2 இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது. இதற்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும், கவுதம் கம்பீரை தகுதியிழப்பு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இதற்கு கம்பீர் தரப்பில் எந்தஒரு மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.

Next Story