மம்தாவிற்கு எதிராக கொள்கையின் ரீதியிலான மோதல்தான், தனிப்பட்டது கிடையாது - பிரதமர் மோடி
மம்தா பானர்ஜிக்கு எதிராக கொள்கையின் ரீதியிலான மோதல் மட்டும்தான், தனிப்பட்ட முறையிலானது கிடையாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்து பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்பாக பேசியுள்ளார். மம்தா பானர்ஜி விவகாரத்தில் என்னுடைய மதிப்பீடு முற்றிலும் தவறாகிவிட்டது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவர் மிகவும் கடினமாக உழைக்கும் பெண்மணி என்று நினைத்து இருந்தேன். மம்தா பானர்ஜியிடம் இவ்வளவு மாற்றம் வருத்தம் அளிக்கிறது. வன்முறைக்கு எதிரான அவருடைய போராட்டமே அவரை ஆட்சி பொறுப்புக்கு கொண்டுவந்தது.
வங்காளதேச ஊடுருவல்காரர்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். மாநிலத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியவர். ஆனால் இப்போது தேர்தலுக்காக மாநிலத்தில் நடக்கும் உயிரிழப்புகளுக்கு அமைதியாக இருக்கிறார் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் அரசியல் வன்முறையென்பது முடிவில்லாத சம்பவமாக செல்கிறது. திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், பா.ஜனதா என ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்குள் அடித்துக்கொண்டு, கொலைச் செய்து கொள்வது ஒரு வழக்கமான சம்பவம் போல் செல்கிறது. மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வரும் போது இதுபோன்ற நிலைப்பாடு மாறும் என பார்க்கப்பட்டது. ஆனால் மம்தாவின் ஆட்சியிலும் இச்சண்டைகள் முடிவிலியாக அதிகரித்துதான் செல்கிறது என்பது வெளிப்படையான உண்மையாகும்.
Related Tags :
Next Story