மோடி ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பு - அரவிந்த் கெஜ்ரிவால்
மோடி ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பு என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
டெலியில் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மிக்கு காங்கிரசுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கனவு இல்லை, ஆனால் நாட்டை காப்பாற்றவே கூட்டணிக்கு ஒப்புக்கொண்டோம். கூட்டணி அமைக்க எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம். ஒருவேளை பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதற்கு முழு பொறுப்பு ராகுல்காந்தி தான்.
காங்கிரஸ் கட்சியால் டெல்லியில் வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் டெல்லியில் வெற்றி பெறும் நிலையில் இருந்தால், 7 தொகுதிகளையும் காங்கிரசுக்கு வழங்க தயாராக இருக்கிறேன். ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணிக்கு 4:3 தொகுதிகள் என்பது, பா.ஜனதாவுடன் கூட்டணி சேருவது போன்றது தான். அதாவது காங்கிரசுக்கு கொடுக்கும் 3 தொகுதிகளும் தோற்று தான் போகும். பா.ஜனதாவுக்கு 3 தொகுதிகளை கொடுக்க எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை என கூறினார்.
Related Tags :
Next Story