பாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு


பாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
x
தினத்தந்தி 25 April 2019 1:15 PM IST (Updated: 25 April 2019 1:15 PM IST)
t-max-icont-min-icon

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. #LokSabhaElections2019 #AamAdmi

புதுடெல்லி

இந்தியாவில்   கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் வரும் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான களப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலம், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பிரசாரம் மேற்கொண்டுள்ளன. 

இதையடுத்து கடந்த ஏப்ரல் 1ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் வெளியிட்டார். இதேப்போல் கடந்த 8ம் தேதி பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரியும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான ராஜ்நாத் சிங் வெளியிட்டார். 

இந்நிலையில் இன்று காலை  டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்  துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். 

இந்த தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு, கல்வி, சுகாதாரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது. 

Next Story