தேர்தலில் போட்டியிட சாத்வி பிரக்யாவுக்கு தடை கோரிய மனுவை என்ஐஏ கோர்ட்டு தள்ளுபடி செய்தது
தேர்தலில் போட்டியிட சாத்வி பிரக்யாவுக்கு தடை கோரிய மனுவை என்ஐஏ கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
2008 மலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட சாமியார் சாத்வி பிரக்யா பா.ஜனதா சார்பில் போபால் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை களமிறக்கியதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
இந்நிலையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்த சையத் அசாரின் தந்தை நிசார் அகமது செயத் பிலால், சாத்வி பிரக்யா தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தை நாடினார். விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சாத்வி இப்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இதனை குறிப்பிட்டு போட்டியிட தடைக் கோரப்பட்டது. இந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறிவிட்டது.
Related Tags :
Next Story