இத்தாலியில் இருந்து உறவினர்களை அழைத்து வந்தாலும் பிரதமராக மோடியே மீண்டும் வருவார்; ஸ்மிரிதி இரானி


இத்தாலியில் இருந்து உறவினர்களை அழைத்து வந்தாலும் பிரதமராக மோடியே மீண்டும் வருவார்; ஸ்மிரிதி இரானி
x
தினத்தந்தி 22 April 2019 7:59 PM IST (Updated: 22 April 2019 7:59 PM IST)
t-max-icont-min-icon

இத்தாலியில் இருந்து உறவினர்களை அழைத்து வந்தாலும் பிரதமராக மோடியே மீண்டும் வருவார் என ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.

லக்னோ,

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.  இதற்காக அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.  உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார்.  காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

அமேதி மற்றும் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி உள்ளிட்ட தொகுதிகளுக்கான தேர்தல் மே 6ந்தேதி நடைபெறும்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ள மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி  உத்தர பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, இந்தியா, இத்தாலி அல்லது உலகின் எந்த பகுதியில் இருந்தும் உங்களது உறவினர்களை அழைத்து வாருங்கள்.  இந்திய மக்கள் நியாயம் வழங்குவார்கள்.  அவர்கள் பிரதமராக மீண்டும் மோடியை தேர்வு செய்ய முன்பே முடிவு செய்து விட்டனர்.

ஆனால் இந்த முறை மொத்த காந்தி குடும்பத்திற்கும் ஒரு வலிமையான செய்தி தரப்படும் என கூறியுள்ளார்.

Next Story