நேர்மையான அரசு நாட்டில் சாத்தியம் என தேசிய ஜனநாயக கூட்டணி நிரூபித்துள்ளது; பிரதமர் மோடி
நேர்மையான அரசை நடத்துவது நாட்டில் சாத்தியம் என தேசிய ஜனநாயக கூட்டணி நிரூபித்துள்ளது என பிரதமர் மோடி பேரணியில் பேசியுள்ளார்.
உதய்பூர்,
2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் கடந்த 11ந்தேதியும் மற்றும் 2வது கட்ட தேர்தல் கடந்த 18ந்தேதியும் நடந்து முடிந்துள்ளது.
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பிரசாரம், பொது கூட்டம் மற்றும் பேரணி நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் பேசும்பொழுது, தீவிரவாதத்திற்கு முடிவு கட்டும் வகையில் அதற்கு எதிராக தனது அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால், பாலகோட் வான்வழி தாக்குதலுக்கு சான்று கேட்டு எதிர்க்கட்சிகள் நாட்டை கீழ்நிலைக்கு கொண்டு செல்கிறது. நேர்மையான அரசை நடத்துவது என்பது நாட்டில் சாத்தியம் என தேசிய ஜனநாயக கூட்டணி நிரூபித்துள்ளது. உங்களது ஆதரவால் நாடு முழுவதும் நேர்மையின் புதுபாரம்பரியம் நிறுவப்பட்டு வருகிறது என கூறினார்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது கோடீசுவர நண்பர்களுக்கு கடன்கள் வழங்க வங்கிகளிடம் வற்புறுத்தியது. ஆனால் முத்ரா திட்டத்தின் கீழ் எங்களது அரசு ஏழைகள், பழங்குடியினர் மற்றும் இளைஞர்களுக்கு கடன்களை வழங்கி வருகிறது என்று அவர் பேசினார்.
Related Tags :
Next Story