நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மாநில கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சி அமைப்போம் - மம்தா பானர்ஜி
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மாநில கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சியமைப்போம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கயேஷ்பூர்,
மேற்கு வங்காளத்தில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இந்த பிரசாரத்தில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கி வருகிறார். நாடியா மாவட்டத்துக்கு உட்பட்ட கயேஷ்பூரில் நேற்று நடந்த கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் பா.ஜனதாவோ, காங்கிரசோ புதிய அரசை அமைக்கப்போவது இல்லை. அனைத்து மாநில கட்சிகளும் இணைந்து புதிய அரசை அமைப்போம். இதற்காகவே நாங்கள் ஐக்கிய இந்திய முன்னணியை அமைத்து இருக்கிறோம். மோடி அரசை நாங்கள் வெளியேற்றுவோம்.
பா.ஜனதா தொடர்ந்து பொய்களையே பேசி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் பொய் உரைத்து வருகின்றனர். ஆனால் தங்கள் உரைகளில் பெரிய பெரிய வாக்குறுதிகளை கொடுக்க தவறுவது இல்லை. பொய்யர்களின் கட்சியாக பா.ஜனதா இருக்கிறது. பிரதமர் மோடி, பொய் கூறியே கலவரத்தை தூண்டி வருகிறார்.
பணமதிப்பு நீக்கத்தை செயல்படுத்தினார்கள். ஆனால், அதன் விளைவால் மக்கள் தங்கள் வேலையை இழக்க நேரிட்டதுடன், விவசாயிகள் முடிவில்லா துயரத்துக்கும் தள்ளப்பட்டனர். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புக்கு பிரதமர் மோடி உறுதியளித்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இங்குள்ள மக்களை பற்றியோ, அவர்களது கலாசாரம் குறித்தோ அவர்களுக்கு எதுவும் தெரியாது. கலவரத்தை உண்டுபண்ணவே அவர்களுக்கு தெரியும். தங்கள் தேவைக்கு மட்டும் இங்கு வருவார்கள்.
விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஒவ்வொருவருக்கும் மோடி தீங்கிழைத்து வருகிறார். எனவே நீங்கள் யாரும் பா.ஜனதாவுக்கு வாக்களிக்கக்கூடாது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Related Tags :
Next Story