அடுத்த தேர்தலில் அண்டை நாட்டில் இருந்து ராகுல் காந்தி போட்டியிடுவார்; மத்திய மந்திரி பியூஷ் கோயல்


அடுத்த தேர்தலில் அண்டை நாட்டில் இருந்து ராகுல் காந்தி போட்டியிடுவார்; மத்திய மந்திரி பியூஷ் கோயல்
x
தினத்தந்தி 21 April 2019 6:54 AM IST (Updated: 21 April 2019 6:54 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த தேர்தலில் அண்டை நாட்டில் இருந்து ராகுல் காந்தி போட்டியிடுவார் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைக்கான அமேதி தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.  இதனுடன் கேரளாவின் வயநாட்டிலும் அவர் போட்டியிடுகின்றார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பியூஷ் கோயல், அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி ராகுலை வீழ்த்துவார்.  வயநாட்டிலும் ராகுல் தோல்வியை தழுவுவார்.  இதனால் அடுத்த தேர்தலில் போட்டியிட சில அண்டை நாடுகளில் தொகுதியை தேடுவார் என கூறியுள்ளார்.

இரானியால் தோற்கடிக்கப்படுவோம் என்ற அச்சத்திலேயே வயநாட்டில் அவர் போட்டியிடுகிறார்.  வயநாட்டில் இடதுசாரிகளுக்கு எதிராக போட்டியிடும் அவர், அக்கட்சியினரை விமர்சிக்க போவதில்லை என கூறுகிறார்.  அவர் அச்சத்துடன் உள்ளார்.

ஜனநாயகத்தில், தனது எதிர்ப்பாளர்களை எதிர்த்து பேச தைரியம் இல்லாத ஒரு தலைவர் நாட்டுக்கு சேவை செய்ய இயலாது என்று கூறியுள்ளார்.

கேரள வயநாட்டில் இம்மாத தொடக்கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தபின் பேசிய ராகுல், தனது தேர்தல் பிரசாரம் முழுவதும் இடதுசாரிகளுக்கு எதிராக விமர்சித்து எதனையும் பேசப்போவதில்லை.  நான் இங்கு ஒற்றுமைக்கான செய்திளை அளிக்கவே வந்துள்ளேன் என்று கூறினார்.

Next Story