வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா நின்றால் போட்டி உச்சகட்டமாக இருக்கும்
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா நின்றால் போட்டி உச்சகட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.
வாரணாசி,
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். ஆன்மிக நகரமான அந்த தொகுதியில் 7-வது மற்றும் இறுதிகட்டமாக மே 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நாளை (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
வருகிற 26-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். முன்னதாக 25-ந் தேதி அங்கு பிரமாண்ட ஊர்வலத்தில் மோடி பங்கேற்கிறார்.
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை தவிர இதுவரை வேறு எந்த பெரிய கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. பீமா கட்சி தலைவர் சந்திரசேகர் என்கிற ராவண் முன்னதாக பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார். ஆனால் பின்னர் அந்த முடிவை அவர் கைவிட்டார்.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வாரணாசி தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் பரவியது. உத்தரபிரதேச மாநில பொறுப்பாளரான பின்னர் அவரிடம் காங்கிரஸ் தொண்டர்கள் பிரியங்காவை அமேதியில் போட்டியிடும்படி கேட்டதற்கு, அப்படியென்றால் நான் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லையா? என்றார்.
அதுமட்டுமின்றி பிரயாக்ராஜ் முதல் வாரணாசி வரை அவர் கங்கை பயணம் மேற்கொண்டபோது, மோடி தொகுதியில் மிகவும் மோசமான பணிகள் குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார். அப்போதும் வாரணாசி தொகுதியில் தான் போட்டியிட விரும்புவதை சூசகமாக தெரிவித்தார். அவர் வாரணாசி தொகுதியில் நின்றால் போட்டி உச்சகட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உத்தரபிரதேச சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தீபக் சிங் கூறியதாவது:-
பிரியங்கா பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் தனது கருத்தை வாக்காளர்களிடம் தெளிவாக கூறிவிட்டார். மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது என்றும் அவர் கூறினார். பிரியங்கா கூறிவிட்டாலும், இதனை இறுதியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியும் அறிவிக்க வேண்டும். ராகுல் காந்தி இதுவரை அந்த முடிவை மறுக்கவும் இல்லை, உறுதிசெய்யவும் இல்லை.
பிரியங்கா அவரது பாட்டி இந்திரா காந்தியை போன்ற இரும்பு பெண்மணி. பிரியங்கா தேர்தலில் மோடியை தோற்கடித்து வாரணாசி தொகுதி எம்.பி. ஆவார். மோடி வாரணாசியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டையே ஏமாற்றிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story