பிரதமர் மோடியை முஸ்லிம் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என பேசிய சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


பிரதமர் மோடியை முஸ்லிம் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என பேசிய சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 20 April 2019 10:05 PM IST (Updated: 20 April 2019 10:05 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியை முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்து தோற்கடிக்க வேண்டும் என பேசிய சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான நவ்ஜோத் சிங் சித்து பீகாரில் நடந்த பேரணி ஒன்றில் பேசும்பொழுது, சிறுபான்மை சமூக மக்களான முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்து பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என கூறினார்.

இதனால் அவருக்கு எதிராக சமீபத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.  தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அதனை சித்து மீறியுள்ளார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இது தவிர்த்து அரசியல் பிரசாரங்களில் மத விசயங்களை பேசுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ஒன்றில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து சித்துவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  அதில் 24 மணிநேரத்தில் சித்து பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story