பிரிவினைவாதத் தலைவர்கள் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை


பிரிவினைவாதத் தலைவர்கள் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 27 Feb 2019 4:24 PM IST (Updated: 27 Feb 2019 4:24 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரின் பிரிவினைவாதத் தலைவர்கள் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

ஸ்ரீ நகர் 

ஜம்மு காஷ்மீரின் பிரிவினைவாதத் தலைவர்கள்  யாசின் மாலிக், ஷபீர் ஷா, மிர்வாயிஸ் உமர் பரூக், முகமது அஷ்ரப் கான், மஸ்ரத் ஆலம், ஜாபர் அக்பர் பட் மற்றும் நசீம் கீலானி வீடுகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட  சோதனைகளின் போது சொத்து ஆவணங்கள், பணப்பரிமாற்ற விவரங்கள் , ரசீதுகள், வங்கிக் கணக்குகள், கடிதங்கள், தீவிரவாதிகளுக்கு விசா கோரும் விண்ணப்பங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மிர்வாஸ் உமர் பரூக் இல்லத்தில் இருந்து தீவிரவாதிகளுடனும் பாகிஸ்தான் தலைவர்களுடனும் தொடர்பு கொள்வதற்கான ஹைடெக் இணைய தொழில் நுட்பம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரின் 11 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. தெற்கு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்கள் வீடுகளிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

Next Story