ராணுவ வீரரின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்


ராணுவ வீரரின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 15 Feb 2019 10:52 AM (Updated: 15 Feb 2019 11:31 AM)
t-max-icont-min-icon

ராணுவ வீரரின் உடலை சுமந்து சென்றார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

ஸ்ரீநகர்,

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இதனிடையே, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்றடைந்தார் . அங்கு, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அவர் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதோடு, ராணுவ வீரர் ஒருவரின் சடலத்தையும் அவர் தனது தோளில் சுமந்து சென்றார்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு நடத்தினார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Next Story