பிரபல சித்தகங்கா தலைமை மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானார்
பெங்களூரு தும்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்தின் தலைமை மடாதிபதி சிவகுமாரசாமி உடல் நலக்குறைவால் காலமானார்.
பெங்களூரு,
கர்நாடகாவின் தும்கூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவக்குமாரசாமி (வயது111) அவருக்கு முதுமை காரணமாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பித்தப்பை அறுவை சிகிச்சை அளி்க்கப்பட்டது. மீண்டும் மடாதிபதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் அதை ஏற்க அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. இதனால் மடாதிபதியின் வேண்டுகோளை ஏற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்து மடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக, தும்கூரு மடத்தில், சிறப்பு யாகங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானார். அவரது மறைவிற்கு கர்நாடக முதல்-மந்திரி மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மடாதிபதி சிவக்குமாரசாமி உடல் நாளை மாலை 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இறுதிச்சடங்கு நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-மந்திரி குமாரசாமி, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர், தும்கூரு சித்தகங்கா மடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story