பொய் பிரசாரத்தை நம்பவேண்டாம்: ‘சபரிமலையில் அரவணை, அப்பம் போதுமான அளவு உள்ளது’ தேவஸ்தானம் தகவல்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அப்பம் மற்றும் அரவணை இருப்பு குறைவாக உள்ளதால், இவற்றின் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாகவும், இவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
திருவனந்தபுரம்,
திருவிதாங்கூர் தேவஸ்தான செயல் அதிகாரி சுதீஷ்குமார் இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் அப்பம் மற்றும் அரவணை 15 நாட்களுக்கு தேவையான அளவிற்கு இருப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story