சபரிமலை வழக்கு கடந்து வந்த பாதை


சபரிமலை வழக்கு கடந்து வந்த பாதை
x
தினத்தந்தி 29 Sept 2018 5:00 AM IST (Updated: 29 Sept 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு குறிப்பிட்ட வயது பெண்கள் செல்ல விதிக்கப்பட்ட தடைக்காக பல்வேறு காலங்களில் வழக்குகள் நடைபெற்றன.




சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு குறிப்பிட்ட வயது பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்த வழக்கு கடந்துவந்த பாதை:-

* 1990 மகேந்திரன் என்பவர், சபரிமலை கோவிலில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கேரள கோர்ட்டில் வழக்கு.

* 1991 ஏப்ரல் 5-ல் கேரள ஐகோர்ட்டு தீர்ப்பு. பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று அறிவிப்பு.

* 2006 இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தடையை நீக்கக்கோரி வழக்கு.

* 2008 கம்யூனிஸ்டு தலைமையிலான கேரள அரசு பெண்களுக்கு தடையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு ஆதரவு தெரிவித்தது.

* 2008 மார்ச் 7-ல் சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது.

* 2016 ஜனவரி 11-ல் நீண்டகாலத்துக்கு பிறகு வழக்கு விசாரணைக்கு வந்தது.

* 2017 பிப்ரவரி 20-ல் வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

* 2018 ஜூலை 17-ந் தேதி 5 நீதிபதிகள் விசாரணை தொடக்கம்

* 2018 ஆகஸ்டு 1-ந் தேதி விசாரணை முடிந்து சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு கூறுவது நிறுத்திவைப்பு.

* 2018 செப்டம்பர் 28-ல் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்லலாம் என தீர்ப்பு.

* இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கேரள அரசு தனது நிலையை 3 முறை மாற்றி உள்ளது. கம்யூனிஸ்டு அரசு பெண்களை அனுமதிக்கலாம் என்றும், காங்கிரஸ் அரசு அனுமதிக்க கூடாது என்றும் மனு தாக்கல் செய்தன.



Next Story