டெல்லியில் மர்ம நபர்களால் தலைமைக்காவலர் சுட்டுக்கொலை


டெல்லியில் மர்ம நபர்களால் தலைமைக்காவலர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 12 Sept 2018 7:23 AM IST (Updated: 12 Sept 2018 7:23 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் மர்ம நபர்களால் தலைமைக்காவலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் ராம் அவ்தார். இவர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.ஜேத்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவரை அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக சுட்டனர். 

இதில் நிலைகுலைந்த காவலர் ரம் அவ்தார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலைக்கான நோக்கம் இன்னும் புலப்படவில்லை. தலைமைக்காவலரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்தியாவின் தலைநகரான டெல்லியியில், காவலர் ஒருவரே  சுட்டுக் கொல்லப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story