முன்னாள் குடியரசு தலைவர் கியானி ஜைல் சிங்கின் மகன் ஜோகிந்தர் சிங் உடல்நல குறைவால் மரணம்


முன்னாள் குடியரசு தலைவர் கியானி ஜைல் சிங்கின் மகன் ஜோகிந்தர் சிங் உடல்நல குறைவால் மரணம்
x
தினத்தந்தி 21 Aug 2018 6:57 AM (Updated: 21 Aug 2018 6:57 AM)
t-max-icont-min-icon

முன்னாள் குடியரசு தலைவர் கியானி ஜைல் சிங்கின் மகன் ஜோகிந்தர் சிங் உடல்நல குறைவால் மரணம் அடைந்து உள்ளார்.

மொகா,

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் கியானி ஜைல் சிங்.  இவர் கடந்த 1972ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை பஞ்சாப் முதல் அமைச்சராக இருந்துள்ளார்.  அதன்பின் 1982ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை குடியரசு தலைவராக இருந்துள்ளார். 

இவரது மகன் ஜோகிந்தர் சிங் (வயது 82).  இவர் தனது மகன் ரூபிந்தர் சிங்குடன் பஞ்சாபின் லூதியானா நகரில் வசித்து வந்துள்ளார்.

அவருக்கு நீண்ட நாட்களாக உடல்நல குறைவு ஏற்பட்டு இருந்தது.  இந்த நிலையில் அவர் தனது சொந்த கிராமம் ஆன சந்த்வானில் உடல்நல குறைவால் நேற்று மரணம் அடைந்துள்ளார்.

அவரது இறுதி சடங்கு சந்த்வானில் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story