இடுக்கி அணையில் 26 ஆண்டுக்கு பிறகு தண்ணீர் திறப்பு

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் 192 செ.மீ. மழை பெய்துள்ளது. இது, வழக்கத்தை விட 49 சதவீதம் அதிகம்.
திருவனந்தபுரம்,
2 ஆயிரத்து 403 அடி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையில், நேற்றைய நீர்மட்டம் 2 ஆயிரத்து 392 அடியாக இருந்தது.
முழு கொள்ளளவை நெருங்குவதால், இடுக்கி அணையில் இருந்து விரைவில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதற்கு முன்பு 1992–ம் ஆண்டுதான் தண்ணீர் திறக்கப்பட்டது. 26 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இதையடுத்து, முதல்–மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தியது. தண்ணீர் திறக்கப்படும்போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. பத்திரமாக வெளியேற்றப்பட வேண்டிய மக்களின் எண்ணிக்கையை போர்க்கால அடிப்படையில் கணக்கெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story